SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நைஜீரியாவில் மசூதி மீது சரமாரி துப்பாக்கி சூடு : 20 பேர் பரிதாப பலி

2014-04-07@ 05:56:30

யோப்: வட கிழக்கு நைஜீரியாவில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து, அங்கு தொழுகை நடத்தி கொண்டிருந்த 20 பேரை சுட்டுக் கொன்றனர்.வடகிழக்கு நைஜீரியாவில் யோப் மாநில தலைநகர் தமாதுருவுக்கு அருகில் உள்ள புனிகாரி கிராமத்தில் நேற்று காலை கிராமத்தினர் அங்குள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி ஏந்தி மசூதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் மக்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் மசூதிக்குள் தொழுகை நடத்தி கொண்டிருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதற்கு முன்பு இதேபோல் பல முறை இஸ்லாமிய தீவிரவாதிகளால் துப்பாக்கி தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.

நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாத இயக்கத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலில் இதுவரை 1,200 பேர் பலியாகி உள்ளனர். நைஜீரியாவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சமமாக உள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்