SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம் : பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்ப

2014-03-13@ 01:34:04

எட்டயபுரம்: பாரதியாரின் நினைவு நாள் 93 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 11 லிருந்து செப்டம்பர் 12க்கு மாற்றப்பட்டுள்ளது.தேசியகவி பாரதி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். தனது பாடல் வரிகளால் தமிழக மக்களை தட்டி எழுப்பிய பாரதி சென்னை திருவல்லிக்கேணியில் 1921ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு இறந்தார். அன்றிலிருந்து இன்று வரை பாரதியாரின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் செப். 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. பாரதியார் இறந்து சுமார் 93 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அரசு தற்போது அவரது நினைவு தினத்தை செப்டம்பர் 12ம் தேதி அனுசரிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இதையடுத்து, எட்டயபுரத்தில் உள்ள பாரதி பிறந்த வீடு, மற்றும் நினைவு மண்டபத்திலுள்ள கல்வெட்டுகளில் நினைவு தினம் குறித்த தேதி மாற்றப்பட்டது. இது குறித்து பாரதி அன்பர்கள் கூறுகையில்,‘‘பாரதியார் செப்டம்பர் 12 அதிகாலை 1.30 மணிக்கு  இறந்தார். பொதுவாக தமிழர்கள் வழக்கப்படி சூரிய உதயத்திற்கு பின் தான் மறுநாள் கணக்கில் கொள்ளப்படும். அதன்படி அவர் இறந்த நாளான செப்டம்பர் 11ம் தேதி நினைவுநாளாக அனுசரிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆங்கில தேதி வழக்கப்படி இரவு 12 மணிக்கு மேல் மறுநாள் என்ற அடிப்படையில் செப்டம்பர் 12ம் தேதி நினைவு நாளாக அரசு அறிவித்திருக்கிறது‘‘ என்றனர்.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்