SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையை ஆதரிக்க சீனா உறுதி

2014-02-12@ 09:09:58

பீஜிங்: ஐ.நா. மனித உரிமை கழக மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கப்போவதாக சீனா கூறியுள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன வெளியுறவித்துறை அமைச்சர் வாங் ஈ மனித உரிமைகள் பெயரால் இலங்கையின் உள்விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்று கூறியுள்ளார்-. இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசிடம் பேசிய அவர் இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை, பிரதேச ஒற்றுமைக்கு சீனா பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களை சமாளிக்கக்க கூடிய திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்-டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவது ஒறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்துள்ள இலங்கை தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளின் ஆதரவை திரட்டும் முடிவில் ஈடுபட்டுள்ளது.

drug coupon card prescription coupons drug discount coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்