தூத்துக்குடி அனல்மின் நிலைய 1வது யூனிட்டில் திடீர் தீ விபத்த

Date: 2014-01-30@ 01:39:30

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலைய 1வது யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட்கள் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள 1வது யூனிட்டின் ஆஷ் பிளான்டில் சாம்பல் வெளியாகும் பகுதியில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதை பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த மின் வயர்கள், போர்டுகள், சிறிய மோட்டார்கள் சில எரிந்து சேதமானது. தீ விபத்தால் பெரிய அளவிலான சேதம் எதுவும் இல்லை. மேலும், மின் உற்பத்தியிலும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இரு முறை பெரிய அளவில் தீ விபத்துகள் நடந்ததில், கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News