SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படகுக்குள் தண்ணீர் வந்தது எப்படி?

2014-01-28@ 00:29:42

சென்னை: காஞ்சிபுரத்தில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா சென்ற 32 பேர் கொண்ட குழுவினர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகினர். அந்த 32 பேரில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 பேர் உயிர் இழந்தனர். 15 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 16 பேரின் சடலங்கள் அடையாளம்  கண்டுபிடிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்சா(33) என்பவரின் சடலம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. விபத்தில் உயிர் தப்பிய சிவானந் தம் கூறியதாவது: அந்தமானிலிருந்து நாங்கள் சென்ற ரோஸ் தீவு 1 கிலோ மீட்டர் தூரம்தான்.

ஆனால், குடியரசு தினவிழா பாதுகாப்பு காரணமாக பல வழிகள் அடைக்கப்பட்டிருந்ததால், சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி போய்விட்டு திரும்பி வந்தோம். இன்ஜின் அருகே உள்ள வால்வு துருபிடித்து ஓட்டை விழுந்திருந்தது. அந்த ஓட்டை வழியாக சிறிது, சிறிதாக தண்ணீர் வந்தது. நாங்கள் தண்ணீர் அதிகமாக வருவதை தடுக்க கால்களை வைத்து அடைத்தோம். ஓட்டை மேலும், பெரிதாக தண்ணீர் குபுகுபுவென படகுக்குள் ஏறத் தொடங்கியது. இதனால், அந்த பகுதியில் உள்ளவர்கள் பயந்துகொண்டு மற்றொரு பகுதிக்கு ஓட ஆரம்பித்தனர்.

அப்போது பாரம் தாங்காமல், படகு ஒரு பக்கமாக சாய்ந்து மூழ்கியது. நாங்கள் கம்பியை பிடித்து தொங்கியபடி இருந்தோம். இவ்வாறு அவர் கூறினார். உயிர் தப்பிய அனுராதாவின் கணவர் தியாகராஜன், நிருபர்களுக்கு கண்ணீர்மல்க அளித்த பேட்டி: கடந்த வியாழக் கிழமை இரவு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றோம்.  படகு கவிழ்ந்த நேரத்தில் நாங்கள் சிலர் படகின் மேல் பகுதியில் உள்ள கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கினோம். அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலர் எங்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீவுகளில் இருந்த சிலரும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், தண்ணீரில் நீந்தி வந்து எங்கள் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது எங்கிருந்தோ ஒரு படகு எங்கள் படகு அருகே வந்து நின்றது. மீனவர்களும், அந்த தீவில் இருந்தவர்களும், எங்களை மீட்டு பத்திரமாக அந்த படகில் ஏற்றினர். இவ்வாறு கூறிவிட்டு அதற்குமேல் எதுவும் கூற முடியாமல் அழத் தொடங்கினார்.

விபத்தில் உயிர் பிழைத்த போலீஸ் அதிகாரி மனைவி வள்ளி கூறுகையில், ÔÔவிபத்துக்குள்ளான படகில் உயிர்காக்கும் சாதனங்கள் எதுவுமில்லை. மேலும், அளவுக்கு அதிகமான பயணிகள் படகில் ஏற்றப்பட்டனர்ÕÕ என்றார். சுற்றுலா ஏற்பாடு செய்த செல்வராஜ் கூறுகையில், ÔÔநாங்கள் 32 பேர் ஒரு குழுவாக சுற்றுலா சென்றோம். அதில் என் மகள், மருமகள், பேத்தியும், வந்தனர். நாங்கள் 32 பேர் சென்றதில், 17 பேர் பலியாகிவிட்டனர். 15 பேர் உயிருடன் திரும்பியுள்ளோம்ÕÕ என்றார்.

துரைஜெயகுமாரின் தம்பி அசோகன்: என்னுடைய மகனுக்கு பிப்ரவரி 9ம் தேதி திருமணம் நடத்த உள்ளேன். சுற்றுலா சென்ற எனது அண்ணன் துரைஜெயகுமாரும், அண்ணியும் சீக்கிரம் வந்து திருமண ஏற்பாடுகளை செய்வதாக சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
கணபதியின் மருமகன் பெருமாள் (பட்டு ஜவுளி உரிமையாளர்): இது பனி காலம் என்பதால் சுற்றுலா செல்ல வேண்டாம் என, நாங்கள் ஏற்கனவே அவரிடம் கூறினோம். அவர் இறந்ததை செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.

venlafaxine forum click venlafaxine 150
abilify and coke link abilify and coke
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion pill procedures late term abortion pill having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்