SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம் ஆத்மி பெயரில் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார

2014-01-14@ 00:52:47

சென்னை :ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரானது. எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் டெல்லி மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர். கெஜ்ரிவால் முதல்வரானார். அதைதொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நான் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். எங்கள் அலுவலகம் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ளது.

நாங்கள்தான் உண்மையான ஆம் ஆத்மி. தற்போது, அமைந்தகரையில் அலுவலகம் ஒன்றை வைத்து நாராயணன், கிருஷ்ண மூர்த்தி, பால கிருஷ்ணன், அரிதாஸ், சல்டானா மீனா ஆகிய 5 பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதில், உண்மை இல்லை.அவர்கள் போலியானவர்கள். தற்போது, அவர்கள் எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி கொண்டு உறுப்பினராக சேர்க்க பண வசூல் செய்து வருகின்றனர். மேலும், கட்சி சின்னத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இப்படி, மோசடி செய்து வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அண்ணா நகர் துணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்