SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!

2014-01-08@ 11:09:56

சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் 28 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புதிய திட்டத்தை கொண்டு வர சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டவரைவை அந்நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த சட்டவரைவின்படி வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை மட்டுமே சவுதியில் தங்கி பணிபுரியலாம். உள்நாட்டு மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்த அதிரடி கட்டுப்பாடுகள் அந்நாட்டில் கொண்டுவரப்பட உள்ளன. மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கி பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரண்டு புள்ளிகளும், 1600 அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு 1.5 புள்ளிகள் என, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
i want to cheat on my husband link my husband cheated on me blog


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்