புத்தாண்டை முன்னிட்டு திருப்பதியில் ஆர்ஜித சேவை ரத்து

கருத்துகள்


MORE VIDEOS

திருப்பதி: ஆங்கில புத்தாண்டையொட்டி, திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி, திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் வரும் 2ம் தேதி இரவு வரை 3 நாட்களுக்கு அனைத்து ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஜனவரி 1ம் தேதியான இன்று, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 2ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒரு வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு நுழைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2 மணி முதல் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் 25ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுடன் வந்த பக்தர்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் நேற்று மாலை 5 மணி முதல் வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
 
தேவஸ்தான இணை தலைமை செயல் அலுவலர் சீனிவாசராஜு நேற்று காலை முதல் மாலை வரை தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

irupati : English New Year , all the Tirupati temple arjita services have been canceled . English New Year , devotees of Lord Tirupati seven mountain in the various activities undertaken on behalf of the Devasthanam to be unmolested . Yesterday morning, on the night of 2 to 3 days to cancel all arjita Devasthanams services .
தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

டாக்டர் கீதா பாஸ்கர் முதன்மை விஞ்ஞானி - பாலிமர் சயின்ஸ் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையம்‘விஞ்ஞானி பொருட்களை நம்புகிறார்... மனிதர்களை அல்ல’ - இதைச் ...

உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே  நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ...

Advertisement

தேர்தல் செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

16

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சிக்கல்
ஆதரவு
தோல்வி
உயர்வு
லாபம்
செலவு
சுகம்
கவலை
நன்மை
கவனம்
யோகம்
சினம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran