SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகத்தில் ஆசிட் வீசுவதாக கூறி மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்தனர

2013-12-31@ 00:14:40

சென்னை: முகத்தில் ஆசிட் வீசுவதாக கூறி மிரட்டி, பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெற வைத்ததாக, தொழில் அதிபர் பைசூல் மீது, நடிகை ராதா மீண்டும் புகார் அளித்துள்ளார். நடிகை ராதா, கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், தொழிலதிபர் பைசூல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பணத்தை பறித்ததாக புகார் அளித்திருந்தார்.  போலீசார் பைசூல் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையில், நடிகை ராதா சில தினங்களுக்கு முன், வடபழனி காவல் நிலையத்திற்கு சென்று பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ராதா, பைசூல் மீது  மீண்டும் புகார் அளித்தார். புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர்  மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்.

பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bunfestival

  ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 • metrochennai

  சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

 • protest_chennai123

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 • satteravai_stalin11

  சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

 • PakistanistudentUSgunshot

  அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்