நெய் கிடைப்பதில் சிக்கல் திருப்பதி கோயிலில் லட்டு தட்டுப்பாட

Date: 2013-12-18@ 02:00:00

திருமலை:திருப்பதி கோயிலில் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் லட்டு வாங்காமல் செல்லமாட்டார்கள். ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் வரை தேவஸ்தானம் சார்பில் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், மாற்றுத் திறனாளிகள், முதியோர், ஒரு வயது குழந்தையுடன் செல்லும் பெற்றோர்களுக்கு 10க்கு 2 லட்டு வீதம் 1 லட்சத்து 50 ஆயிரம் லட்டுகள் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. இது தவிர யி100க்கு 4 லட்டு என கோயிலுக்கு வெளியேயும் விற்பனை செய்யப்படுகிறது.தினமும் 9 டன் நெய் பயன்படுத்தி லட்டு தயார் செய்யப்படுகிறது.

முன்பு பெங்களூரில் இருந்து நெய் வரவழைக்கப்பட்டது. தற்போது, உத்தர பிரதேச மாநிலம் பில்கேரி என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து நெய் வாங்கப்பட்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.உத்தர பிரதேசத்தில் இருந்து நெய் வர கால தாமதம் ஏற்படுவதால் ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கும் குறைவான லட்டுகளே தற்போது தயார் செய்யப்படுகிறது. இதனால், கோயிலின் வெளியே விற்கப்பட்டு வந்த லட்டுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால், மாலை நேரத்திலேயே கூடுதல் லட்டு வழங்கப்படும் கவுன்டர்கள் மூடப்படுவதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் லட்டு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். எனவே, தட்டுப்பாடில்லாமல் லட்டு கிடைக்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

rite aid load to card coupons link rite aid store products
venlafaxine forum mdwguide.com venlafaxine 150

Like Us on Facebook Dinkaran Daily News