SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை கடற்படையின் அத்துமீறல் உடனடியாக நடவடிக்கை தேவை : பிரதமருக்கு ஜெ. கடிதம

2013-12-13@ 02:59:34

சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:டிசம்பர் 11ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 47 மீன்பிடி படகுகளில் 325 மீனவர்கள் நாகப்பட்டினம் அருகேயுள்ள அக்கரைபேட்டை யில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கொடூர ஆயுதங்களின் உதவியுடன் வந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தையடுத்து 15 படகுகளில் இருந்து 110 மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சரணடைந்துள்ளனர். சரணடைந்து 110 மீனவர்களும் திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் டிசம்பர் 12ல் புதுக்கோட்டை மாவட்டம்  ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட போர்காலத்தில் நடத்தப்படும் குற்றங்கள்போல் இலங்கை அரசின் ஒப்புதல் பெறாமல் இதுபோன்ற நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டிருக்காது.

ராஜதந்திரத்தை பயன்படுத்தி  உடனடியாக, தீர்க்கமான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும். புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதருக்கு வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் மூலம் சம்மன் அனுப்பி அவரிடம் எங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் தாங்கள் எடுத்துச்சொல்லி இந்த பிரச்னையை காலம் தாழ்த்தாமல் முடிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்துக்கு  பேரழிவு ஏற்படும் நிலை உருவாகும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sinemet go sinemet
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்