SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பயண செலவு ரூ.205 கோடி
2012-03-26@ 01:13:19

புதுடெல்லி : ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.205 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆன செலவு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் திரட்டியுள்ளனர். இது தொடர்பான தகவல்களை தர பல அரசு துறைகள் மறுத்தபோதும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தகவல்களை ஆர்வலர்கள் பெற்றுள்ளனர்.

இந்த தகவல்களின்படி, கடந்த 2007ம் ஆண்டு ஜூலையில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிரதிபா பாட்டீல் இதுவரை 12 முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். மொத்தம் 22 நாடுகளில் 79 நாட்கள் அவர் அவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார். வெளிநாடுகள் செல்லும் போது ஏர், இந்தியா நிறுவனத்தின் போயிங் 747,400 ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூடானுக்கு மட்டும் சிறிய ரக ஜெட் விமானத்தில் பிரதிபா சென்றுள்ளார். இதற்காக ஏர் இந்தியாவுக்கு பாதுகாப்பு துறை ரூ.169 கோடி வாடகையாக செலுத்தி உள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் ஜனாதிபதி மற்றும் அவருடன் சென்றவர்கள் தங்குவதற்கு, வாகனத்தில் செல்வதற்கு வெளியுறவுத் துறை ரூ.36 கோடி செலவிட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.205 கோடி செலவிடப்பட்டுள்ளது. வரும் ஜூலையில் பிரதிபாவின்  பதவி காலம் முடிவடைய உள்ளது. அதற்கு முன் தென் ஆப்ரிக்காவுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kkonnor_chims_park11

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கம்

  • tasmac_protestt

    டாஸ்மாக் கடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன

  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • skjimBURNdisease26AGE

    பிலிப்பைன்சில் அரிய வகை தோல் நோயால் முதியவர் போல் தோற்றமளிக்கும் 26 வயது இளைஞர்