SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமானத

2013-11-29@ 12:17:39

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்று வட்டத்தை நெருங்கியதும் அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை. ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது. ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது. சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அனேகமாக அது சிதறுண்டு போயிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது. தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது. நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன். மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம்.

ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம். தப்பிப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது. ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
abortion pill procedures late term abortion pill having an abortion
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்