SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15 ஆண்டு இழுபறிக்கு பிறகு ரஷ்யாவில் இன்று விழா கடற்படையில் விக்ரமாதித்யா போர் கப்பல் சேர்ப்ப

2013-11-16@ 01:59:21

புதுடெல்லி: இந்தியா -ரஷ்ய உறவில் சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல், 15 ஆண்டு கால இழுபறிக்கு பிறகு இந்திய கடற்படையில் இன்று இணைக்கப்படுகிறது. இதற்கான விழா ரஷ்யாவில் நடக்கிறது.ரஷ்ய கடற்படையில் 1987ம் ஆண்டில் பகு என்ற விமான தாங்கி போர்க்கப்பல் சேர்க்கப்பட்டது.  பின்னர், இது ‘அட்மிரல் கோர்ஷ்கோவ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த கப்பல் 44,500 டன் எடை, 284 மீட்டர் நீளம் கொண்டது. கடைசியாக கடந்த 1995ல் இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டது. இதை இந்தியாவுக்கு இலவசமாக தருவதாக 1998ல் அப்போதைய ரஷ்ய பிரதமர் எவ்னேவ் பிரிமகோவ் அறிவித்தார்.ஆனால், இந்த கப்பலை பழுதுபார்த்து, எதிர்கால தேவைக்கு ஏற்ப அதிநவீனமாக்கி கொடுப்பதற்கான செலவை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதை இந்தியா ஏற்றுக் கொண்டது.

ஆரம்பத்தில், கப்பலை புதுப்பிப்பதற்காகும் செலவை இந்திய நிபுணர்கள் குழு சரியாக கணக்கிடாமல் கோட்டை விட்டு விட்டது. அப்போது, இதற்கு 9,300 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2004ல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது, இந்த விமானத்துடன் 16 மிக் &29 கே போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, கண்காணிப்பு ஹெலிகாப்டர்களையும் இணைத்து, 2008ம் ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.ஆனால், 2008ல் விமானத்தை நவீனப்படுத்தும் பணியை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாலும், கப்பலுக்கு கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டதாலும் இந்திய & ரஷ்ய உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் செலவையும் ஏற்பதாக இந்தியா ஒப்புக்கொண்டது. இதன் காரணமாக, இக்கப்பலை தயார்படுத்துவதற்கான மொத்த செலவு 14,260 கோடியாக உயர்ந்தது.

இந்நிலையில், 15 ஆண்டு கால இழுபறிக்குப் பிறகு விக்ரமாதித்யா முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இன்று நடைபெறும் விழாவில், இக்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மற்றும் இந்திய கடற்படை தளபதி, உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். இதில், ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி ரோகோசின் கலந்து கொள்கிறார்.இந்த கப்பலை கடற்படையில் சேர்ப்பதின் மூலம், இந்தியாவின் கடற்படை மேலும் பலம் பெறும். இதில் இடம் பெறும், மிக்&29கே அதிநவீன போர் விமானம், 700 கடல்மைல் தூரம் சென்று எதிரி கப்பல்களை தாக்கக் கூடியது. நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. இதன் மூலம், இதன் பறக்கும் திறன் 1,900 கடல்மைல் அதிகரிக்கும். மேலும், நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள், இலக்கை துல்லியமாக சென்று தாக்கக் கூடிய வெடிகுண்டுகள், ராக்கெட்டுகள், கடல் கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் போன்றவை இடம் பெறுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

 • largebudhastatue

  உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்