SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்சில் பரிதாபம் ஹையான் புயலுக்கு 1,200 பேர் பலி லட்சக்கணக்கானோர் வெளியேற்றம

2013-11-10@ 00:58:10

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் சூறாவளி புயலால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பலரை காணவில்லை. வியட்நாமை நோக்கி நகர்ந்த புயலால் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் என்ற புயல் நேற்று முன்தினம் தாக்கியது. மணிக்கு 275 கிமீ வேகத்தில் கரை கடந்த புயலால் பலத்த காற்று வீசியது. இதனால் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாகனங்கள் அப்பளமாக நொறுங்கி கிடக்கின்றன.
 
இதனால் போக்குவரத்து, தகவல் தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கனமழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை, இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிலிப்பைன்சில் ஹையான் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கத்தின் பொதுசெயலாளர் க்வன்டோலின் பாங் கூறுகையில், Ô வெள்ளிக்கிழமை தாக்கிய ஹையான் புயலால் லெய்தி தீவில் உள்ள தாக்லோபான் நகரம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இறந்த 1000க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் சாலைகளிலும் நீரிலும் கிடப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பாதிப்புகள் குறித்த முழு விவரம் கிடைக்கவில்லைÕ என்றார்.

இந்த புயல் காரணமாக 7,50,000 பேர் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர்பலி பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், இவர்களது வீடுகளும், உடைமைகளும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.  நிலத்திலும் பெரும் சேதம் ஏற்படுத்தும் புயலாக ஹையான் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் இதே பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மீண்டும் அதே பகுதியில் புயல் தாக்கியிருப்பது பிலிப்பைன்ஸ் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்