SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முசாபர்நகர் கலவரம் பற்றி சர்ச்சை பேச்சு தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பினார் ராகுல

2013-11-09@ 01:37:07

புதுடெல்லி : முசாபர்நகர் மதக் கலவரம் பற்றி பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பதில் அனுப்பினார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் இந்த மாதமும், அடுத்த மாதமும் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக ராஜஸ்தான் மாநிலம் சுருவிலும், மத்திய பிரதேசத்தில் இந்தூரிலும் பிரசாரம் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த மதக் கலவரம் பற்றி பேசினார்.

அதில், ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது’ என்று ராகுல் பேசினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜ. தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தது. அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, மதக் கலவரத்தை தூண்டி விடும் வகையில் பேசிய ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் பேச்சுகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதியது.

‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது. இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

cialis cvs coupon cialis cialis 20mg
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்