SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மரணம

2013-10-18@ 00:12:32

சென்னை : சமூக சேவகி சரோஜினி வரதப் பன் (92) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலை வர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

பிரபல சமூக சேவகியும், தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் மகளுமான சரோஜினி வரதப்பன்  இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன்.
கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சென்னை நகர ஷெரீப் ஆக பணியாற்றியவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளுக்கு சொந்தக்காரர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:  சரோஜினி வரதப்பன் மறைவு எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்துக்கு நினைவிடம் அமைத்து 1998ல் திறந்து வைத்தேன். அந்த விழாவில் வரவேற்று பேசிய சரோஜினி வரதப்பன், பத்து ஆண்டுகளாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கிய காரியத்தை கருணாநிதி, அவருடைய காலத்தில் பூர்த்தி செய்திருக்கிறார்.

மிக அற்புதமாக அழகிய மண்டபத்தை இங்கு உருவாக்கி, உள்ளே அவர் உருவச் சிலையையும் வைத்திருக்கிறார். கருணாநிதியின் எத்தனையோ பெரிய சாதனைகளில் இதையும் ஒரு பெரிய சாதனையாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டது இப்போதும் என் நினைவுகளில் இருக்கிறது. அவர் மறைவு மகளிர் குலத்துக்கே ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், குறிப்பாக மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

sms spy app read spy apps free
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
drug coupon card prescription coupons drug discount coupons
cialis cvs coupon cialis coupon cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்