தரமணியில் திருக்குறள் ஓவியக் கூடம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவ

Date: 2013-10-07@ 12:24:15

சென்னை: சென்னை தரமணியில் திருக்குறள் ஓவியக் கூடம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருக்குறளை விளக்கும் ஓவியங்கள், குறும் படங்கள் ஓவியக்கூடத்தில் இடம் பெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். தொல்காப்பியத்தினை நினைவு கூறும் வகையில் ரூ.50 லட்சத்தில் ஆய்வு இருக்கை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம் அமைக்க ரூ.75 லட்சம் ஒதுக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News