SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு லட்சம் கட்டினால் ஒரு கோடி 300 பேரிடம் ரூ.30 கோடி சுருட்டிய கும்பல

2013-10-03@ 00:59:43

ஊத்தங்கரை : ஒரு லட்சம் கட்டினால் ஒரு கோடி தருவதாக கூறி 300 பேரிடம் 30 கோடிக்கு மேல் சுருட்டிய மோசடி கும்பல் குறித்து ''திடுக்'' தகவல் வெளியாகியுள்ளது.
கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து திருப்பூர் பாசி நிறுவனம், கோவை பைன் பியூச்சர் நிறுவனம் ஆகியவை 1,600 கோடிக்கு மேல் சுருட்டின. தற்போது இரு நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்ப ட்டு நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனம் மாநிலம் முழுவதும் முகவர்களை நியமித்து அப்பாவி மக்களிடம் வசூலித்துள்ளனர். குறைந்தபட்ச முதலீடே ஒரு லட்சம் தானாம். அந்த முகவர் கையில் காசு வாங்க மாட்டார்களாம். நேராக வங்கிக்கு அழைத்து சென்று பணம் செலுத்துபவர் பெயரிலேயே கணக்கு தொடங்குவார்கள். பின்னர் முதலீடு செய்பவரை சொந்த செலவில் பணத்துடன் சோழவந்தான் அழைத்து செல்வர். அங்கு நிறுவனத்தின் அருமை பெருமைகளை சொல்லி செலுத்தும் பணம் எப்படி ஒரு கோடியாக கிடைக்கிறது. ஏன் ஒரு கோடி கொடுக்கிறோம் என்பதை புரிய வைப்பார்களாம்.

அதோடு பணத்தை செலுத்தியவரிடம், ‘நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம். அதனாலே உங்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை. வெளியே கேட்டா எல்லாம் சொல்லாதீங்க. மத்தவங்க கேட்டா மறுக்க முடியாம போயிடும் பாருங்க’ விளக்கத்தையும் கொடுத்து ரகசியம் அம்பலமாகாமல் பார்த்து கொள்கின்றனர். முதலீடு செய்த நாளில் இருந்து 4 மாதத்தில் ஒரு கோடி நான்கு தவணைகளில் செலுத்தி விடுவோம் என உறுதியளித்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் இந்த மோசடி நிறுவனத்தை நம்பி மோசம் போன பலர் தற்போது வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த மெகா மோசடி குறித்து தகவல் கிடைத்ததும் விசாரணை நடத்த கிருஷ்ணகிரி எஸ்.பி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஊத்தங்கரை டிஎஸ்பி கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக ஏஜென்டாக செயல்பட்ட ஊத்தங்கரையை சேர்ந்த இருவர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் 300க்கும் மேற்பட்டோர் ஸீ30 கோடி பணத்தை இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இன்னும் பலர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் எத்தனை கோடி ஏமாற்றப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிதி நிறுவன அதிபருக்கு வலைவீச்சு

மதுரையை சேர்ந்த மோசடி கும்பல் தலைவனான விஐபியை பிடிக்க இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் தலைமையில் தனிப்படை மதுரை சோழவந்தான் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மோசடி ஆசாமி மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓய்வு டிஎஸ்பி சிக்குகிறார்

இந்த மோசடி திட்டத்தில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஒருவரும் ஏஜென்டாக செயல்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஓய்வு பெற்ற டிஎஸ்பி உள்பட அனைத்து ஏஜென்ட்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

i want to cheat on my husband link my husband cheated on me blog
coupons for cialis printable read free discount prescription cards
how do abortion pill work cost for an abortion misoprostol abortion

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X