SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 24 மணி நேரத்தில் 510 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.85 லட்சத்தை தாண்டியது; இதுவரை 17,400 பேர் பலி

2020-07-01@ 09:35:23

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,85,493-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 18,653 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 510 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 17,400 பேர் உயிரிழந்த நிலையில் 3,47,979 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,74,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,855 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 90,911 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் நேற்று முன்தினம் வரை 3-வது இடத்தில் இருந்த தமிழகம் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 90,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,201 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50,074 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 87,360 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,742 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 58,348 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 8227 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 5,647 பேர் குணமடைந்தது.
பீகாரில் 10,043 பேருக்கு பாதிப்பு; 67 பேர் பலி; 7,687 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 440 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 364 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 2,860 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 2,250 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1,315 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 596 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 32,557 பேருக்கு பாதிப்பு; 1846 பேர் பலி; 23,662 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 14,548 பேருக்கு பாதிப்பு; 236 பேர் பலி; 9,972 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,388 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,086 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 4,442 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 2,306 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 18,014 பேருக்கு பாதிப்பு; 413 பேர் பலி; 14,220 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2,490 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 1,884 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 973 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 648 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,234 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 553 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 52 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 160 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 122 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 459 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 168 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 7065 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 5189 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 714 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 272 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 5,568 பேருக்கு பாதிப்பு; 144 பேர் பலி; 3,867 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 2881 பேருக்கு பாதிப்பு; 41 பேர் பலி; 2,231 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 15,242 பேருக்கு பாதிப்பு; 246 பேர் பலி; 7,918 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 7,497 பேருக்கு பாதிப்பு; 101 பேர் பலி; 4,722 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 16,339 பேருக்கு பாதிப்பு; 260 பேர் பலி; 7294 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 18,559 பேருக்கு பாதிப்பு; 668 பேர் பலி; 12,130 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 23,492 பேருக்கு பாதிப்பு; 697 பேர் பலி; 16,084 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 14,595 பேருக்கு பாதிப்பு; 187 பேர் பலி; 6,511 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 191 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 62 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 13,593 பேருக்கு பாதிப்பு; 572 பேர் பலி; 10,395 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 953 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 580 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 97 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 50 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 213 பேருக்கு பாதிப்பு; 82 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 89 பேருக்கு பாதிப்பு; 52 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்