SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கு; ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

2020-07-01@ 08:56:50

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரிக்கவும், மாவட்ட அமர்வு நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ஐகோர்ட் கிளை தீவிரமாக கண்காணிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதியளித்த ஐகோர்ட் கிளை, பிரேத பரிசோதனை அறிக்கை, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

விசாரணை அதிகாரியான மாஜிஸ்திரேட்டிடம் முறையற்ற வகையில் நடந்து கொண்டதால் தூத்துக்குடி கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘‘சிபிஐ விசாரணைக்கு மாற்றியது அரசின் விருப்பம். தற்போதுள்ள கொரோனா சூழலில், ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்று சிபிஐ அதிகாரிகள் எப்போது வந்து விசாரிப்பர் என்பது தெரியவில்லை. இவர்களின் விசாரணைக்கு தாமதம் ஏற்படலாம். அதுவரை தடயங்கள் மற்றும் ஆவண, ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அனைத்தும் அழிக்கப்படும் நிலை ஏற்படும். நீதிமன்றத்தை நம்பி, நீதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்த வழக்கை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க வேண்டும். டிஜிபியின் முறையான உத்தரவுக்காக அவர் காத்திருக்க வேண்டியதில்லை. ஐகோர்ட் உத்தரவு அடிப்படையில் உடனடியாக விசாரணையை துவக்க வேண்டும். இந்த விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்கும். இவரின் விசாரணையே சரியான பாதையில் செல்வதாக அரசு நினைத்தால் சிபிசிஐடி விசாரணையை தொடரலாம்’’ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஜூலை 2) தள்ளி வைத்தனர்.

தொடர்ந்து, சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி பெற்றுக் கொண்டு விசாரணையை துவக்கினார். இந்நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபின்பு ஒப்படைத்தார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இன்று தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தந்தை, மகன் சாவு வழக்குப்பதிவு செய்து விசாரணையை சிபிசிஐடி போலீசார் துவங்கியுள்ளதால், வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்