SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 9 பேருக்கு கொரோனா உறுதி

2020-07-01@ 05:37:13

செங்கல்பட்டு1: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300 டாக்டர்கள், 350 செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தற்போது கொரோனா வுக்கு சென்னைக்கு அடுத்தபடியாக 5,300பேர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் 4 டாக்டர்கள், 5 செவிலியர்களுக்குகொரோனா உறுதியானது. அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், புறநோயாளிகள், உள்நோயாளிகள், பிரசவ வார்டில் பணியாற்றியவர்கள் என அனைவரையும் கண்காணித்து பரிசோதனை செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து டீன் சாந்திமலர் கூறுகையில், நோய்தொற்று ஏற்பட்ட டாக்டர்கள், செவிலியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்தொற்று மேலும் பரவாமல் இருக்க உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றார். பெரிய மருத்துவமனையான  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், இதுவரை டாக்டர்கள்,  ஊழியர்கள் என ஒருவருக்கும் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக உள்ளனர் என சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2 நாட்களுக்கு முன் கூறினார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், கடந்த வாரம் ஜமாபந்தி துவங்கியது. இதில், பணியாற்ற அனைத்து கிராமங்களில் இருந்து விஏஓக்கள், கிராம உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில், கடந்த 2 நாட்களுக்கு முன், ஒரு கிராம உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, வாலாஜாபாத் தாலுகா அலுவலகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளித்து, பொதுமக்களை அனுமதிக்காமல் நுழைவாயில் மூடப்பட்டன. ஆனாலும், ஜமாபந்தி மனுக்களை சரிபார்க்கவும், அவசர வேலைகளுக்காகவும் தினமும் ஊழியர்கள், தாலுகா அலுவலகம் வருகின்றனர். அவர்கள், நுழைவாயிலை மூடிவிட்டு, பணியாற்றுகின்றனர். அவர்களும், அச்சத்துடன் உள்ளனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் ஆடை தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்படுகிறது. இங்கு ஊரடங்கு நிபந்தனைபடி, தற்போது சுமார் 200 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு யாற்றும் புழுதிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு, கடந்த சில நாட்களுக்கு உடல் நிலை பாதித்தது. இதையடுத்து, அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அதே கம்பெனியில் பணியாற்றும் உத்திரமேரூரை சேர்ந்த 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, தனியார் கம்பெனியில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியத்தில் நேற்று கேளம்பாக்கம், கோவளம், படூர், மேலக்கோட்டையூர், கானத்தூர் ரெட்டிக் குப்பம், தாழம்பூர், சிறுசேரி, வடநெம்மேலி ஆகிய பகுதிகளில் மொத்தமாக 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்