SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தை,மகன் உடலில் மோசமான காயங்கள்.! காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது..!! மதுரை நீதிமன்றம்

2020-06-30@ 11:27:00

மதுரை: தந்தை மற்றும் மகன் உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் ஒரு  நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை என்று மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சிபிஐ விசாரணையை தொடங்கும் முன் இந்த வழக்கை விசாரிக்கப் போவது யார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிபிஐ விசாரிக்கும் வரை நெல்லை சரக டிஐஜி அல்லது சிபிசிஐடி வழக்கை விசாரிக்க முடியுமாக என்று கேள்வி எழுப்பினர். தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்க 12 மணி வரை ஒத்திவைத்துள்ளனர். தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து 4 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு சாத்தான்குளம் விவகாரத்தை விசாரித்தது. நீதிமன்றத்தில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.

காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு:
சாட்சி அளிக்கையில் காவலர் ரேவதி அச்சத்துடன் இருந்தார். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.  நீதித்துறை நடுவரின் அறிக்கையை அடுத்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் ஆய்வு:
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் விசாரணை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் காவல்நிலையம்:
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு அதிகாரியாக செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன் காவல் நிலைய பொறுப்பாதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செயல்பட நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 24 மணி நேரமும் பணயில் இருப்பார்கள். தாசில்தார் செந்தூர்ராஜன், துணை தாசில்தார் சாமிநாதன் ஆகிய இருவரும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். 

நடுவரை போலீசார் மிரட்டல்:

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை விசாரணை நடத்த வந்த நடுவரை போலீசார் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்