SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதிப்பு அதிகமுள்ள வடசென்னையில் மக்கள் நலனுக்காக கொரோனா தடுப்பு களப்பணியில் இறங்கிய திருநங்கைகள்!!

2020-06-30@ 10:43:05

சென்னை:  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள வடசென்னை பகுதியில் வைரஸை கட்டுப்படுத்த திருநங்கைகள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடசென்னையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில், திருநங்கைகள் வீடுவீடாக சென்று பொதுமக்களின் உடனிலையை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும், இதனைத்தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான விப்புணர்வுகளையும் அவர்கள் ஏற்படுத்தி வருகினற்னர். தினமும் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை வடசென்னை பகுதியில் உள்ள பழையவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் திருநங்கைகள் 'கைகழுவும் முறைகள்' பற்றியும் 'முககவசம் ' அணியும் முறை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பின்னர், அவர்கள் கொண்டுவந்துள்ள குறிப்பேட்டில் வீட்டில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, வயது, உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அந்த பாதிப்புகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அதனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மாநகராட்சியிடம் ஒப்படைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அதிகளவு பரவி வரும் இந்த காலகட்டத்தில் தங்களின் உயிர்களைக்கூட பெரிதாக கருதாமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் திருநங்கைகளை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தானார்களராக திருநங்கைகள், தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றும் முதல் பணி இதுவே ஆகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்