SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரியாணி பட பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியீட

2013-08-20@ 00:12:58

சென்னை : பிரியாணி படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியாகி உள்ளது. அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் போலீசில் புகார் செய்தனர். நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் பிரியாணி. இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்ட் செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 31ம் தேதி நடக்க இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் 8 பாடல்களும் நெட், மற்றும் சிடி மூலம் வெளியாகி விற்பனையானது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் நேற்று கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி கரண் சின்காவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில், எங்கள் படத்தின் பாடல் வெளியிடப்படும் முன்பு நெட் மூலமும், சிடி மூலமும் வெளியாகி உள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இதை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
பின்னர் இயக்குனர் வெங்கட்பிரபு நிருபர்களிடம் கூறுகையில், பொதுவாக ஒரு படம் வெளிவரும் முன்பு ஒன்று இரண்டு பாடல்கள்தான் வெளிவரும்.

ஆனால் எங்கள் படத்தின் 8 பாடல்களும் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதை வெளியிட்டவர்கள் பற்றிய விவரங்களை புகாரில் கூறி உள்ளோம். பொதுவாக வீடியோ பைரசி கொழுந்து விட்டு எரிகிறது. இதை உடனே தடுக்காவிட்டால் பெரிய ஆபத்தாகி விடும். பிரியாணி படம் யுவன் சங்கர் ராஜாவின் 100வது படம். ஆகஸ்ட் 31ம் தேதி யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள். அவரது பிறந்த நாளில் பாடல்களை வெளியிட திட்டமிட்டு இருந்தோம்.

அதற்குள் திருட்டு சிடி வெளிவந்து விட்டதால் இசை வெளியீட்டு விழா நடத்தாமல், வரும் புதன் கிழமை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றார்.
நடிகர் கார்த்தி கூறுகையில், ‘படைப்பாளிகள் கஷ்டப்பட்டு எடுக்கும் படத்தை சிலர் திருட்டுத்தனமாக வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் வேதனை அடைகிறார்கள். படைப்பாளிகள் கஷ்டப் பட்டு எடுக்கும் படத்தின் பாடல்களை ஜாலிக்காக டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்புவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதை போலீஸ் தடுக்க வேண்டும்’ என்றார்.

sms spy app click spy apps free


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்