SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்

2020-06-05@ 17:06:27

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று நடந்த சன்டையின் போது மதியழகன் காயமடைந்தார். காயமடைந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் இன்று உயிரிழந்தார். காஷ்மீரில் உள்ள கிராமங்களையும், வீரர்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள், அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இதனை அடுத்து, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து, அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்