SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

2020-06-04@ 01:23:13

காஞ்சிபுரம்: முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் உள்ள நூற்றாண்டு அண்ணா நினைவுத்தூண் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.காஞ்சி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.  காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு, கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 97 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கினர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய செயலாளர் குமணன், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் சசிக்குமார், மகாவீர் சந்த், ராம்பிரசாத், எஸ்.பி.ரமேஷ், பி.எம்.நீலகண்டன், பி.எஸ்.விஜயகுமார், தமிழ்செல்வன், லட்சுமணன், சேகர், யுவராஜ் உள்பட பலர்  பங்கேற்றனர். இதேபோல் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரசு மருத்துவமனையில் ஜூன் 3ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

வழக்கறிஞர்கள் தம்பிதுரை, முருகன், பார்த்தசாரதி, துரைமுருகன், அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தம்பு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் சிவ.பழனி ஏற்பாட்டில் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்