SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவாயூர் கோயிலில் இன்று முதல் திருமணங்கள் நடத்தலாம்

2020-06-04@ 01:22:14

திருவனந்தபுரம்: குருவாயூர்  கோயிலில் திருமணங்களை நடத்தலாம் எனவும், அதிகபட்சமாக  50 பேர் கலந்து  கொள்ளலாம் எனவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் ெதரிவித்தார்.    இதையடுத்து  குருவாயூர் ேகாயிலில் திருமணங்களை நடத்த  அனுமதிப்பது தொடர்பான தேவசம்போர்டின் ஆலோசனை கூட்டம்  நேற்று முன்தினம் நடந்தது.  இதில் 4ம் தேதி முதல் திருமணங்களை நடத்த  அனுமதிக்கலாம் என  தீர்மானிக்கப்பட்டது. ஒரு திருமணத்தில் மணமக்கள் உட்பட 10 பேர்   மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலந்து கொள்பவர்கள் அனைவரும் புகைப்படத்துடன்   கூடிய அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்.  

அதிகாலை  5 மணிமுதல் நண்பகல் 12 வரை திருமணங்களை நடத்தலாம். முன்பதிவு  செய்யாத  திருமணங்களுக்கு அனுமதியில்லை. ஒரு நாள் அதிகபட்சமாக 60 திருமணங்கள் நடத்தலாம்.முதலில் முன்பதிவு   செய்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள  நேரத்தில் மட்டுமே மண்டபத்தில்  அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு திருமணமும்  முடிந்தவுடன் மண்டபம்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும்.ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் அன்று  திருமணத்துக்கு  அனுமதியில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்