SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘அழிக்கும் ஆப்ஸ்’ பதிவிறக்கம் 50 லட்சத்தை தாண்டியது கொரோனா பரப்பியதால் தீராத கோபம்: சீனாவுக்கு எதிராக திரும்பிய மக்கள் மனம்

2020-06-04@ 00:43:06

புதுடெல்லி: இன்று நேற்றல்ல...  பல ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை நாசப்படுத்தியதில் சீனாவுக்கு முக்கிய பங்கு உண்டு. வல்லரசு நாடான அமெரிக்காவும் இந்த பாதிப்புக்கு தப்பவில்லை. சீன சுங்கத்துறை வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, சீனா இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறை 5,680 கோடி டாலர் (₹4,28,840 கோடி). இந்தியா ஏற்றுமதி செய்வதை விட, சீன இறக்குமதிதான் அதிகம். சீன டயர்கள், பொம்மைகள், ஸ்டீல் என ஒவ்வொரு சீன இறக்குமதியும் இந்திய தொழில்துறையை பதம் பார்த்து வருகின்றன. இப்படி பல நாடுகளை சீரழித்த சீனாவில் உருவாகி, அழையா விருந்தாளியாக வந்த லேட்டஸ்ட் வரவு, கொரானா. இது, உயிப்பலி வாங்கி வருவதோடு, மொத்த தொழில் துறையையும் முடக்கி சர்வ நாசம் செய்து விட்டது. இதனால், உலக நாடுகள் எல்லாமே சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. கொரோனா பரவலுக்கு பிறகு, இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வேயில், கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என 67 சதவீதம் பேர் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, ‘சீன ஆப்ஸ்களை நீக்குங்கள்’ (Remove China Apps) என்ற பெயரில் ஒரு மொபைல் ஆப்ஸ் உருவாக்கப்பட்டது. ஒன் டச் ஆப்ஸ் லேப் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. கடந்த மே 17ம் தேதி இதை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு எதிரான எல்லை பிரச்னையும் பரப்பை ஏற்படுத்தியுள்ளதால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்சை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால், இலவச கூகுள் ஆப்ஸ் பட்டியலில் டாப் இடங்களை பிடித்து விட்டது ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’
 இந்த ஆப்சை பதிவிறக்கம் செய்த பிறகு, அதன் மூலம் ஸ்கேன் செய்தால், சீன ஆப்ஸ்களை பட்டியலிட்டு காண்பிக்கும். ஒவ்வொரு ஆப்ஸ்க்கும் அருகே, அதை நீக்குவதற்கான பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அழுத்தினால், உடனே போனில் இருந்து சீன ஆப்ஸ் நீக்கப்பட்டு விடும். இந்த ஆப்ஸ் தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என கூறியுள்ள கூகுள் நிறுவனம், இதனை தங்கள் பிளே ஸ்டோரில் நீக்கி விட்டது. இருப்பினும் குறுகிய கால அளவிலேயே 50 லட்சத்துக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டது, சீனாவுக்கு எதிரான மக்கள் மன நிலையை காட்டுவதாக உள்ளது.

டாப் 100 ஆப்ஸ்களில் சீன ஆக்கிரமிப்பு
கூகுள் ஸ்டோரில் இருந்து இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்ஸ்களில் டாப் 100 இடங்களில் சீன ஆப்ஸ்கள்தான் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் சில:  
* ஹலோ, ஷேர் இட், டிக் டாக், லைக், க்வாய், யுசி பிரவுசர், லைவ் மீ, பிகோ லைவ், வீகோ வீடியோ, பியூட்டி பிளஸ், கேம் ஸ்கேனர், கிளாஷ் ஆப் கிங்ஸ், மொபைல் லெஜெண்ட்ஸ், மாபியா சிட்டி, கிளப் பேக்டரி, ஷெய்ன், ரோம்வி, வீ மேட், கேம் ஆப் சுல்தான்ஸ் என சமூக வலைதளம், பிரவுசர், விளையாட்டு உட்பட அனைத்து பயன்பாட்டிலும் சீன ஆப்கள்தான் அதிகம்.
* தொழில்நுட்ப இணையதளத்தில் உள்ள புள்ளி விவரப்படி, 2017ம் ஆண்டு டிசம்பரில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள டாப் 100 ஆப்ஸ்களில் 18 சீன ஆப்ஸ், சாப்ட்வேர்கள்தான் இருந்தன. இது 2018 இறுதியில் 44 ஆக உயர்ந்தது. இன்று, பிளே ஸ்டோர் வேண்டுமானால் கூகுளுடையதாக இருக்கலாம். இதில் டாப் இடத்தில் உள்ளவற்றில் பெரும்பாலானவை சீன ஆப்ஸ்கள்தான்.
* சீனாவுக்கு எதிரான மன நிலையா–்ல் டிக் டாக்கிற்கு பதிலாக மித்ரன் ஆப்ஸ் பிரபலமானது. பாகிஸ்தானில் இருந்து வாங்கிய ஆப்ஸ்சை பெயரை மட்டும் மாற்றி வெளியிட்டிருந்ததை கண்டுபிடித்த கூகுள் இதை நீக்கியது.
* ஜூம் ஆப்ஸ் சீனாவை சேர்ந்தது என்பதையும், போனில் தகவல்களை இது திருடுகிறது என பரவியதால், இதற்கு பதிலாக ‘சே நமஸ்தே’ பிரபலமாகி வருகிறது. இதற்கிடையில், ஜூம் ஆப்ஸ் அமெரிக்காவில் உருவானதுதான் என அந்த நிறுவனம் தரப்பில் விளக்கம் வெளியானது.
* பிளே ஸ்டோரில் முதல் 5 இடத்தில் இருந்த டிக்டாக், லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட போர் பதற்றத்துக்கு பிறகு 10ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதுபோல் பிற சீன ஆப்ஸ்களும் டாப் பட்டியலில் இருந்து இனி பின்னுக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிக்கத்தை போக்குமா மேக் இன் இந்தியா?
என்னதான் சீன பொருட்களை மக்கள் வெறுத்தாலும், அன்றாட வாழ்க்கையில் அவை தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டன. சீன பொம்மைகள் உட்பட பல பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. எத்தனையோ எலக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்கள், பொருட்களுக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்தியாவில் உற்பத்தியை வலுப்படுத்துவதுதான். அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இல்லாவிட்டால், பெயரளவில்தான் திட்டம் இருக்கும். நடைமுறையில் சீனாவே ஜெயிக்கும் என்ற நிலை உருவாகிவிடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்