SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்: உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்

2020-06-03@ 11:27:43

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் என இருந்த பணி நாட்கள் 6 நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9 மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்