SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

2020-06-03@ 10:20:14

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் இன்று மட்டும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த மூன்று நாட்களாக, நாள்தோறும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. அதில் 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10,680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 197 ஆக இருந்தது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மட்டும் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறிகுறியுடன் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பிரேதம் மீண்டும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருவெற்றியூரைச் சேர்ந்த 84 வயது முதியவர் மற்றும், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று இரவு முதல் இதுவரை கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. இந்ந நிலையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 6 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில், அவர்களுக்கு கொரோனா இருந்தது உறுதியானால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்