SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவில் பாதிப்பு 72,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.07 லட்சமாக உயர்வு; 5815 பேர் பலி

2020-06-03@ 10:05:19

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,615 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் 8909 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை  5815 பேர் உயிரிழந்த நிலையில், 1,00,303 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 72,300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2465 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 31,333 பேர்  குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 24,586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  197 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,706 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 22,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,  556 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9243 பேர் குணமடைந்துள்ளனர்.  உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மாநில வாரியாக விவரம்:

அசாமில் 1513 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 324 பேர் குணமடைந்தது.
பீகாரில் 4155 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 1946 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 301 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 214 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 564 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 130 பேர் குணமடைந்தது.

கோவாவில் 79 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 57 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 17,617 பேருக்கு பாதிப்பு; 1092 பேர் பலி; 11,894 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 2652 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 1069 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 468 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1412 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 627 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 9373 பேருக்கு பாதிப்பு; 203 பேர் பலி; 6435 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 712 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 320 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 81 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 47 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 89 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 27 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 13 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 2245 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1325 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 82 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2342 பேருக்கு பாதிப்பு; 46 பேர் பலி; 2017 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 1043 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 252 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 3796 பேருக்கு பாதிப்பு; 52 பேர் பலி; 1328 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2718 பேருக்கு பாதிப்பு; 33 பேர் பலி; 953 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 2891 பேருக்கு பாதிப்பு; 92 பேர் பலி; 1526 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 6168 பேருக்கு பாதிப்பு; 335 பேர் பலி; 2410 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 8361 பேருக்கு பாதிப்பு; 222 பேர் பலி; 5030 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 3898 பேருக்கு பாதிப்பு; 64 பேர் பலி; 2421 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 22 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 8420 பேருக்கு பாதிப்பு; 364 பேர் பலி; 5221 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 345 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 140 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 4 பேருக்கு பாதிப்பு; 1 குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்