SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடாது தொடரும் பீதி

2020-06-03@ 00:06:31

சீனாவில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ், உலகில்  245-க்கும்  மேற்பட்ட நாடுகளை ஆட்டிப்படைக்கிறது.  உலகஅளவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியுள்ளது. பலியானோர்  எண்ணிக்கை 3.77 லட்சத்தை தாண்டிவிட்டது. சர்வதேச அளவில், கொரோனா பரவல் மற்றும் உயிரிழப் பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா  ெதாற்று இந்தியாவையும் விட்டு  வைக்கவில்லை. சுமார் இரண்டரை மாதம் ஊரடங்கு  அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறையவில்லை. சர்வதேச அளவில் கொரோனா  பாதிப்பு டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.  தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டிவிட்டது.  மரணம் 5 ஆயிரத்தை கடந்துவிட்டது. அதாவது, இந்தியாவில் முதல் 1 லட்சம்  எண்ணிக்கையை கடக்க,
110 நாட்கள் எடுத்துக்கொண்ட கொரோனா, அடுத்த 1 லட்சம்  எண்ணிக்கையை வெறும் 15 நாட்களில் எட்டிவிட்டது.

இதே வேகம்  தொடர்ந்தால், அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியா சென்றுவிடும் என்ற  அபாயம் எழுந்துள்ளது. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில்  முதலிடத்தில் உள்ளது. அடுத்து, தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.  தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள 3  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகம் எடுக்கிறது. அன்றாடம்  400, 500, 600 பேருக்கு பரவிய கொரோனா, கடந்த இரு தினங்களாக ஆயிரத்தை  தாண்டிச்செல்கிறது.
தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக  தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா தொற்று பல மடங்கு அதிகரிப்பது  மக்களிடம் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று  வேகத்தை பார்க்கும்போது, தமிழகத்தில் சமூக பரவலாக மாறி விட்டதாகவே மருத்துவ  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும்  சமூக பரவல் எட்டிவிட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இனி  வரும் நாட்களை இந்தியா எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என உலக  சுகாதார அமைப்பு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா  பரவல்  இரண்டாம் நிலையிலேயே உள்ளது, சமூக பரவல் என்னும்  மூன்றாம் நிலையை  அடையவில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்  அறிவித்துள்ளார். தமிழக அரசும், சமூக பரவல் என்பதை ஒத்துக்கொள்ள  மறுக்கிறது. கொத்து கொத்தாக கொரோனா பரவல் உள்ளபோதிலும், அது சமூக   பரவல் நிலையை அடையவில்லை என மத்திய-மாநில அரசுகள் அறிவிப்பது வியப்பாக  உள்ளது. கொரோனா சமூக பரவல் என்பதை ஏற்றுக்கொள்ள மத்திய-மாநில அரசுகள்  மறுப்பது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. கொரோனா பரவல் விஷயத்தில்  வெளிப்படைத்தன்மை வேண்டும். இதுவே, தடுப்பு நடவடிக்கைக்கு பலன் கொடுக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்