SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்…

2020-06-02@ 08:29:04

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் மீண்டும் வலைப்பயிற்சியை தொடங்கி உள்ளனர். ஊரடங்கு காலத்தில் உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி செய்தது தற்போது மிகவும் உதவிகரமாக உள்ளதாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
* இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ராஜேஸ்வரி கெயிக்வாட் நேற்று தனது 29வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார். அவருக்கு பிசிசிஐ மற்றும் சக வீராங்கனைகள் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.
* பிரிமியர் லீக் கால்பந்து போட்டித் தொடர் தொடங்க உள்ள நிலையில், லிசெஸ்டர் கிளப் அணி பூட்டப்பட்ட ஸ்டேடியங்களில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடத் தயாராகி உள்ளது.
* ஸ்பெயினில் மீண்டும் தொடங்க உள்ள லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், ஜூன் 11ம் தேதி செவில்லா  ரியல் பெட்டிஸ் அணிகள் மோதுகின்றன.
* இங்கிலாந்தில் 2வது டிவிஷன் கால்பந்து போட்டிகள் 3 மாத இடைவெளிக்குப் பிறகு ஜூன் 20ம் தேதி தொடங்குகின்றன.
* 1998ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த கோகோ கோலா கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரின் புயல் வேக ஆட்டத்தை பார்ப்பதற்காக பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு டிவி முன் காத்திருந்ததை சுரேஷ் ரெய்னா நினைவுகூர்ந்துள்ளார்.
* ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கோஹ்லி இலக்கை சேஸ் செய்யும்போது கடைப்பிடிக்கும் அணுகுமுறை தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக ஆஸி. நட்சத்திரம் ஸ்மித் கூறியுள்ளார்.
* ஷாகித் அப்ரிடி, கவுதம் கம்பீர் இருவரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடும்போது சுய கட்டுப்பாட்டுடன் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வக்கார் யூனிஸ் அறிவுறுத்தியுள்ளார்.
* பந்தை பளபளப்பாக்குவதற்கு எச்சிலுக்கு மாற்றாக ஒரு பொருளை நாம் கண்டுபிடிப்பது அவசியம் என்று இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்