SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரை தலைவரை பார்த்து தொண்டர்கள் சிரிப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-31@ 00:03:41

‘‘ஆசை இருக்கலாம்... அதற்காக ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் முதல்வராகிவிட முடியுமான்னு அவங்க சொந்த கட்சிக்காரங்களே கேட்கிறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பாண்டி என்று ஒரு ஆட்டம் இருக்கு தெரியுமா... இப்போது நான் அதைப் பற்றி சொல்லல. பாண்டியில தாமரையை மலர வைக்க கதர் கட்சியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, 3 மக்கள் பிரதிநிதிகளை தன்னிச்சையாக நியமிச்சாங்க ‘பவர்புல்’ பெண்மணி. அதனால கதர் கட்சி கொஞ்சம் காண்டானதாம். அதை அப்படியே பாண்டியில் கொண்டு சென்று மலர செய்துவிட வேண்டியது தான்னு பவர்புல் பெண்மணி நினைக்கிறார். ஆனால் நடப்பது வேறு மாதிரி இருப்பதால அமைதி காக்கிறாராம். அவருக்கு ஏற்றார்போல உள்ளூர் தாமரை நிர்வாகிகள் தேர்தல் களம் இப்போதைக்கு சரிப்பட்டு வராதுனு மாத்தி யோசிச்சாங்களாம். இதற்காக எல்லா கட்சியில் இருந்தும் மெஜாரிட்டிக்கு தேவையான மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்க திட்டம் போட்டாங்க... இதுல புல்லட் தலைவர் காதுக்கு எப்டியோ தகவல் போச்சாம். அதனால அவரு மலர் தலைவர்களை அழைத்து பாண்டில தேர்தலுக்கு சில மாதங்கள்தான் இருக்கிறது... இப்போது கவிழ்த்தாலும் பலனில்லைனு சொல்லி சைலன்ட் ேமாடுக்கு போயிட்டாராம். ஆனா இதெல்லாம் தெரியாம தாமரையில் உள்ள ஒல்லிக்குச்சி உடம்புக்காரர் தன்னை முதல்வராக நினைத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட்டு, தனக்கு தானே அடிக்கடி குஷிபடுத்திக்கொள்கிறாராம்... இதனையும் அவங்க கட்சிக்காரங்க, உங்களுக்கு சரியான நேரம் இதுதான் எனவே அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என வாட்ஸ் அப்பில் பதிவு ெசய்துவிட்டும் நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை ெசான்னாங்களாம்... அதை கேட்ட பக்கத்தில் இருந்த தொண்டர்கள், பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் நம்ம கட்சியில தேர மாட்டாங்க... அதுக்குள்ள முதல்வர் கனவா... இதை தான் ஆசை, தோசை, அப்பளம் வடை பறிமாறிட்டாங்கனு நினைச்சு தூக்கத்தில் நாக்கை கடித்து கொள்வது தான் என்று சொல்லி சிரிக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யானை பாகன் பலியில் அரசியல் சப்பணமிட்டு உட்கார்ந்து இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘முருகனின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் சப்பணமிட்டு உட்கார்ந்து இருக்கு. இந்த கோயில், பணியாளர்கள் இரு அணிகளாக செயல்படுறாங்களாம். ஒரு அணி ‘அரசர்’ பெயர் கொண்டவரின் தலைமையில் செயல்படுது. இவர் இலை தலைமையிடம் நெருக்கமானவராம்... அதனால, கோயில் அதிகாரிகள் உட்பட அனைவரும் இவர் கட்டுப்பாட்டில் தான் இருக்காங்களாம். இவர் சொல்வதை கேட்காதவர்களுக்கு டிரான்ஸ்பர் கட்டாயமாம். அதனால கோயில்ல பராமரிப்பு உட்பட பல பணிகள் சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதாம்... கட்டுப்படாத மற்றொரு அணி ஊழியர்கள் யாரிடம் பேசுகின்றனர் என்பது கூட ஒட்டு கேட்கப்படுகிறதாம். இந்த கோயிலில் ஆன்மிகத்துக்கு பதில் உள்குத்து அரசியல் தான் நடக்குதாம்.
இவர்கள் அறநிலையத்துறை உத்தரவை மதிப்பதே இல்லையாம். இந்த இரு அணிகளுக்கு இடையேயான மோதலின் உச்சக்கட்டமே, பாகன் பலியாகும் அளவிற்கு போய் விட்டதாம்... பாகனை தாக்கிய சமயத்தில் யானையின் தந்தம் உடைந்திருந்தது, சம்பவ இடத்தில் சிசிடிவி பழுதானது என பாகன் இறப்பில் பல சந்தேகங்கள் கிளம்பியிருக்காம்... 4 முறை தாக்குதல் நடத்திய பிறகும் யானைக்கு மதம் பிடித்து இருக்கா இல்லையானு கண்டுபிடிக்க மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாம ‘அரசர்’ தரப்பினர் தடை போட்டாங்களாம். இதுவும் யானை பாகன் சாவுக்கு காரணம்னு சொல்றாங்க.  ஆன்மிகம் தேட வேண்டிய இடத்தில் அரசியல் உட்கார்ந்ததால் ஒரு உயிரே பலியாகி போச்சேன்னு ஊழியர்கள் வருத்தப்படறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ விடைத்தாள் மாயமானதால் தற்கொலைக்கு முயற்சி எல்லாம் நடந்ததாமே...’’ என்று வேதனையுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா ஊரடங்கு தடை காரணமாக தள்ளிப்போன பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 27ம் தேதி துவங்கியது. மலைக்கோட்ைட மாவட்டத்திலிருந்து 4.15 லட்சம் விடைத்தாள்கள் மாவட்டத்தில் பல்வேறு மையங்களுக்கு சென்றதாம். கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான மஞ்சளுக்கு பெயர் போன மாவட்ட மையத்துக்கு மட்டும் 1.25 லட்சம் விடைத்தாள் பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாம். விடைத்தாள்களை திருத்த ஆயத்தமான அந்த மாவட்ட சிஇஓ அலுவலகத்திலிருந்து மலைக்கோட்டை மாவட்ட சிஇஓ வுக்கு வந்த போனில், நீங்கள் அனுப்பிய விடைத்தாள் பண்டல்களில் ஒன்றை காணவில்லை. ஆனால் ஒன்று கூடுதலாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டதாம். பதறியடித்த சிஇஓ, ஒரு குழுவினரை அங்கு அனுப்பி வைத்தாராம்... நீண்ட ஆராய்ச்சிக்கு பின்னர் விலங்கியல் விடைத்தாள் பண்டலும், உயிரியல் விடைத்தாள் பண்டலும் மாறியிருந்ததாம்... அதை சரி செய்த பின்னர் தான் அந்த குழுவினர் திரும்பினார்களாம்... அதற்கிடையில் பலியாடு ஒன்றை தேடினாங்களாம். அதுல சிஇஓ அலுவலகத்தில் தேர்வுத்துறையை கவனிக்கும் கிளார்க் தான் முழு காரணம் என மற்றொரு கிளார்க் சொன்னாராம். வேலை பறிபோய்விடும் என்பதால் பயந்துபோன தேர்வுத்துறை கிளார்க், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயன்றாராம்... அதை பார்த்து பலியாடு ஆக்க நினைத்தவர் தற்கொலைக்கு தூண்டியதாக தன் மீது வழக்கு பாயுமா என்று நண்பர்களிடம் கேட்டு திரியுறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்