SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திறந்திடு சீசே...

2020-05-30@ 03:47:03

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கின் 4வது கட்டத்தில் மாநில அளவில் சில தளர்வுகள் வழங்கப்பட்டது. விமான சேவை தொடங்கப்பட்டது. கடைகள் திறப்பதற்கும்,அலுவலகம் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் பஸ், ரயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.  இதனால் மாத வருமானத்தை நம்பி வாழும் நடுத்தர குடும்பத்தினர் அலுவலகம் செல்ல முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். இவர்கள் இப்படி என்றால், ஏழைகள், அமை ப்புசாரா தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரின் நிலைமை நாடு முழுவதும் மிகவும் பரிதாபமாக உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ₹20 லட்சம் கோடி தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், ஏழைகள், விளிம்பு நிலை தொழிலாளர்கள் எந்த வகையில் பயன்ெபறுவார்கள் என்ற விளக்கம் இல்லை. தமிழக அரசு ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ெணய் ஆகியவற்றை இலவசமாக அளித்துவிட்டால் ஏழைகளின் அனைத்து பிரச்னையும் தீர்ந்துவிடுமா என்ற கேள்விக்கும் இதுவரை பதில் கிடையாது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் 6 மாதங்களுக்கு தலா ₹7,500 வழங்க வேண்டும் என்றும் உடனடியாக ₹10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு தனது கஜானாவை திறந்து, கொரோனாவுடன் வாழ்க்கை போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவிட வேண்டும். இது சாத்தியமா என்ற விவாதமே தற்போது அவசியமற்றது. வங்கி மூலம் கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது வெறும் கண்துடைப்பு. நிர்கதியாக நிற்கும் ஒருவன் எப்படி கடன் வாங்கி அதற்கு அசலும், வட்டியும் கட்டமுடியும். எனவே சிறு,குறு தொழில்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவது தான் சிறந்த வழி. இதைத்தான் காங்கிரசும் வலியுறுத்துகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப போதிய கால அவகாசம் வழங்காமல் ஊரடங்கை அமல்படுத்தியதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மனைவி, குழந்தைகளுடன் நடந்துசெல்லும் பரிதாபங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் பல உயிரிழப்புகள் நடந்துவிட்டன. இனியும் ஏழைகள், தொழிலாளர்களின் துயர்துடைக்க வழிவகை செய்யாமல், 5ம் கட்ட பொது ஊரடங்குக்கு அரசு ஆலோசனை செய்யுமானால் மிகப்பெரிய இழப்புகளை நாடு சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, மத்திய அரசு ஏழைகளுக்காக மனமிரங்கி கஜானாவை திறந்துடு சீசே.. என்று தாராள நிதியுதவியை வழங்கிட வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்