SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு செல்பி எடுத்ததால் இலை, தாமரை நிர்வாகிகள் தலைமறைவாக இருக்கும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-29@ 02:59:08

‘‘நெல்லை மாவட்டத்துல ஹாட் டாபிக் என்ன....’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்ட  ஆவின் ஊழியர்களுக்கு கொரோனா அச்சம் உச்சத்தில் இருக்காம். ஊரடங்கிற்கு பிறகு உயரதிகாரிகள் மூன்று பேர் பணி மாறுதலில் அல்வா மாவட்டத்திற்கு வந்தாங்க. இந்த அதிகாரிகள் பணி மாறுதலில் வந்ததில் எந்தப்  பிரச்னையும் இல்லை. ஆனால் மூன்று அதிகாரிகளும் வாரா, வாரம் தலைநகருக்கும், டெல்டா மாவட்டத்திற்கும், மாம்பழ நகரத்திற்கும் அடிக்கடி பறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு மட்டும் ஊருக்கு செல்ல இ.பாஸ் வாரம் தோறும்  எப்படியோ கிடைக்குதாம். 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் கிடையாதா என்ற  கேள்விகள் எழலாம். காரில் போனால் காசு செலவாகும்... கார் நெம்பர் பதிவாகும்... நம்மளை கண்டுபிடிச்சுட்டா பிரச்னைனு நினைச்சாங்க... அதுக்காக அவங்க செய்தது தான் சினிமா தனமான கிளைமாக்ஸ். அதாவது பால் கொண்டு செல்லும் ஆவின் டேங்கர் லாரிகளில் ஏறி ஊருக்கு பறந்து விடுகின்றனராம்.  கடந்த ஒரு மாதமாக இவர்கள் ஊருக்குச் சென்று வருவதால் எங்கே கொரோனா தொற்று  நமக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர் டிரைவர்கள், நெல்லை ஆவின்  ஊழியர்கள். ஊழியர்களுக்கு தொற்று வந்து அதன் மூலம் பால் வாங்கும்  நுகர்வோர்களுக்கும் தொற்று பரவினால் அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் வீண்  போய் விடுமே என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர் ஆவின் ஊழியர்கள். வரும் முன் காப்பது தான் நல்லது என்று புலம்புகின்றனர் கீழ்மட்ட ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மருதமலை மாமணியே முருகய்யா...’’ என்று பாட்டு பாடினார் பீட்டர் மாமா.
‘‘என்ன திடீர்னு பாட்டு பாடி கேள்வி கேட்கிறீயா... சரி பதில் சொல்றேன் கேளு... கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் வேலைசெய்யும் டிரைவர் ஒருத்தர், ஒரு வருஷமாக வேலைக்கு வராமலேயே சம்பளம் வாங்கிட்டு இருக்காறாராம். தினக்கூலி வேலைசெய்யும் இவரு, பணியில் சேர்ந்து 5 வருஷம் ஆகாத நிலையில், இப்போ எப்படியாவது பணி நிரந்தரம் ஆகணும் என்பதற்கான வேலையில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
முதல்கட்டமாக, போலி மருத்துவ சான்றிதழ் ரெடி பண்ணியிருக்காரு.... பணி நிரந்தரம் செய்ய மருத்துவ சான்றிதழ் கட்டாயம் என்பதால், முதல்படியை வெற்றிகரமாக தாண்டிவிட வேண்டும் என களத்தில் குதித்துள்ளார். இலை ஆட்கள்  தயவில் காய் நகர்த்தி வர்றாராம். இவரைப்போலவே இன்னொரு டிரைவரும் இதற்கான முயற்சி செய்யறாராம்.  அவர் மேல ஏற்கனவே போலீஸ் வழக்கு இருக்காம்... ஆனாலும், சளைக்காமல் இவரும் ஒட்டப்பந்தயத்தில் இறங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும், இக்கோயில் நிர்வாகத்தில் பணிபுரியும் மூத்த ஊழியர் ஒருவர் சப்போர்ட் பண்றார். இதற்காக, சில லட்சம் ரூபாய் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. மருதமலை மாமணியே முருகய்யா....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யாரால யார் ஜெயிச்சதுன்னு பஞ்சாயத்து ஓடுதாமே....’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில இருக்குற சுமார் 6க்கும் மேற்பட்ட ஏரிகள்ல குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்காங்க. அதுக்காக சுமார் ₹2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கிட்டாங்க.
இப்போ, பிரச்னை என்ன தெரியுமா... இந்த 12 கோடியில எவ்வளவு கமிஷன் கிடைக்கும். அதை யார் பங்கிட்டு கொள்வது என்பது தானாம். இதனால இலை கட்சிக்கும், பழம் கட்சிக்கும் போட்டியாம். இதற்காக சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்துச்சு, அந்த தேர்தல்ல இலைக்கட்சிக்காரங்க வெற்றி பெற்றாங்க. அப்போ, அவங்களோட கூட்டணியில் பழம் கட்சிக்காரங்க இருந்தாங்க. இதனால, பழம்கட்சிக்காரங்க, எங்களாலதான் நீங்க, தேர்தல்ல வெற்றி பெற்றீங்க, நாங்க இல்லன்னா, நீங்க தோல்வியடைஞ்சிருப்பீங்கனு குத்தி காட்டி... ஏரி தூர்வாரும் பணியில எங்களுக்கும் பணி ஒதுக்கணும்னு, போர்க்கொடி தூக்கிவர்றாங்களாம். இதனால் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில இலை, பழம் கட்சிக்காரங்களுக்கு போட்டி நிலவிவருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரே ஒரு செல்பி.. இலை, தாமரை ஆட்களை தெறிக்கவிட்டுள்ளதாமே...’’
‘‘துபாயில் ஒரு வாலிபர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்காரு... அவரது பெற்றோர் மனு கொடுத்ததன் அடிப்படையில், அந்த வாலிபரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிக்கு கொண்டாந்துட்டாங்க... அவரை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தாங்க... இதில் வேடிக்கை என்னன்னா, துபாயில் இருந்து வருவதற்கு எங்கள் அரசு தான் காரணம்னு சொல்லி இலை கட்சி தரப்பும், வெளியுறவுத்துறையுடன் மத்தியில் எங்க கட்சிக்காரங்க பேசித்தான், வாலிபரை அழைத்து வந்ததாக தாமரை தரப்பும் பெருமை அடிச்சுக்கிட்டாங்களாம்... மேலும், அந்த பையனுக்கு உதவுவதாக எண்ணி நிவாரண பொருட்களை வழங்கி, இரு கட்சியினரும் செல்போன்ல படம் பிடிச்சு வந்திட்டாங்க... இப்ப சமீபத்துல அவருக்கு நடந்த பரிசோதனையில, கொரோனா தொற்று உறுதியாயிருக்காம்... இதனால், எங்களால்தான் மீட்கப்பட்டார் என்று பேசித்திரிந்த 2 கட்சியினரும், அவரை சந்தித்த விஐபிக்களும் சத்தமில்லாம எஸ்கேப் ஆயிட்டாங்களாம்... இப்போது வாலிபரை யார், யாரெல்லாம் சந்தித்தார்கள் என மருத்துவமனை சிசிடிவி கேமரா மூலமாக பார்த்து தேடி வருகின்றனராம்... தங்களை போட்டோ எடுத்தவங்க, செல்பி எடுத்தவங்களை அழைத்து சோஷியல் மீடியாவில் போட்டுடாதீங்க... எங்களை கோரன்டைன் பண்ணிடுவாங்கனு பயப்படறாங்களாம்... இதனால ஆம்புலன்ஸ், காக்கி டிரஸ் அணிந்து வரும் தபால்காரரை பார்த்தால் கூட வீட்டில் மறைந்து கொள்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்