SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்

2020-05-28@ 21:49:18

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் எனவும் கூறினார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக’’ எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்