SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளாதார சரிவு

2020-05-28@ 00:15:01

வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இந்தியா. 130 கோடி மக்கள் கொண்ட நம்நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம், உற்பத்தியின்மை காரணமாக பெரும் சரிவை சந்தித்து வந்த நிலையில் கொரோனா ஒட்டுமொத்தமாக உருக்குலைத்து போட்டு இருக்கிறது. இந்திய பொருளாதார வரலாற்றில் 1958, 1966, 1980ம் ஆண்டுகளில் பொருளாதார ஜிடிபி வளர்ச்சி கடும் சரிவை சந்தித்தது. அதற்கு காரணம் பருவமழை பொய்த்தது தான். ஆனால் இன்றைய சரிவுக்கு கொரோனா ஊரடங்கு மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. ஊரடங்கும் ஒரு பெரும் காரணம் என்ற நிலையில் தான் இருக்கிறது.

ஏனெனில் விவசாய உற்பத்தி இந்த ஊரடங்கு நேரத்திலும் எதிர்பார்த்ததை விட உச்சத்தை எட்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கூடியிருக்கிறது. ஆனால் விவசாயம் அல்லாத உற்பத்தி வளர்ச்சி இந்த காலாண்டில் 6 சதவீதம் சரிந்து இருக்கிறது. இதனால் இந்த காலாண்டில் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி குறியீடு கடுமையாக சரியும் என்று தெரிகிறது. குறிப்பாக 25 சதவீதம் சரிந்து விடும் என்பதால் இனிவரும் காலங்கள் மிகப்பெரிய போர்க்களம்தான். இந்திய பொருளாதாரத்தின் பலமே மாநிலங்களின் பங்களிப்பு தான். இன்று அது உடைக்கப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டி வரி மூலம் ஒட்டுமொத்த பொருளாதார கட்டுப்பாட்டையும் தன்கையில் வைத்திருந்த மத்திய அரசின் மமதை கொரோனா தாக்குதல் முன் கடுமையாக தோல்வியை சந்தித்து இருக்கிறது.

மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வரிவருவாய் பங்களிப்பு கூட இன்று வரை முறைப்படி கொடுக்கமுடியவில்லை. பங்களிப்பை சரியாக பங்கிட தெரியவில்லை. அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு மத்திய அரசு தரும் பணத்திற்காக காத்துக்கிடக்கின்றன மாநில அரசுகள். தட்டிக்கேட்கவும் வழிதெரியவில்லை. ஒட்டுமொத்த அதிகார பலத்தை கையில் எடுத்தாலும் மத்திய அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வழி தெரியாமல் திண்டாடுகிறது. எளிதாக சொல்லப்போனால் பணப்புழக்கம் இல்லாத நிலை இன்று உருவாகி மக்களிடையே மனப்புழுக்கம் ஏற்பட்ட இருக்கிறது.

கொரோனா தாக்குதல் ஒருபுறம், பொருளாதார சரிவு மறுபுறம் என்று இருமுனை தாக்குதலில் வேலையிழப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது. 60 நாள் கடந்தும் நீடிக்கும் கொரோனா ஊரடங்கால் அச்சம் அடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊர் நோக்கி செல்லும் அவலம் நீடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அனைவர் மனதிலும் அவநம்பிக்கை மட்டுமே தொற்றி நிற்கிறது. இப்போது தேவை நம்பிக்கை. அதை பிரதமர் மோடியால் மட்டுமே விதைக்க முடியும். அதற்கு ₹20 லட்சம் கோடி போன்ற பசப்பு வார்த்தைகள் உதவாது. உண்மை, யதார்த்தம், கடும் உழைப்புதான் சரிந்து நிற்கும் பொருளாதாரத்தை எழுந்து நிமர வைக்கும். அதற்கு ஒட்டுமொத்த தேசமும் ஒத்துழைப்பது அவசியம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்