SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எச்சில் ஆபத்து

2020-05-27@ 01:39:20

சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா  வைரஸ் இன்று அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. 235-க்கும் மேற்பட்ட நாடுகளில் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடிய வைரஸ், அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள  முடியாமல் உலக நாடுகள் திணறுகின்றன. ஒரு புறம் நோய்க்கு  தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பது, மறுபுறம், நோய் பரவலை தடுப்பதற்கான வழிகளை  ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சுவாசத்தின் மூலம்  இந்த வைரஸ் உடலில்  நுழைகிறது. நம் உடலில் உள்ள செல்களை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகிறது. தொண்டை அருகே உள்ள  செல்களில், முதலில் தொற்றிக்கொள்கிறது. சுவாசப்பாதை மற்றும்  நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலையாக  மாற்றிவிடுகிறது. பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி, உடலில்  அதிக செல்களில் தொற்று ஏற்படுத்துகிறது.

சத்தமாக பேசுபவர்களின்  வாயில் இருந்து எச்சில் துவாலை வெளியேறும்போதும், பொது இடத்தில் எச்சில் துப்புவதின் மூலமும் இந்த வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்கிறது. நம்மூர் வாசிகள் சாலையில் நடந்து செல்லும்போதும், பொது இடத்தில் நின்று அரட்டை அடிக்கும்போதும், மிக எளிதாக எச்சில் துப்பும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நுண்ணிய எச்சில் துளிகள் வழியே  கொரோனா எவ்வாறு பரவுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்கா தேசிய  அறிவியல் அகாடமி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆராய்ச்சியை  மேற்கொண்டுள்ளனர். நம்மிடமிருந்து வெளியேறும் நுண்ணிய  எச்சில் துளிகள் 10 நிமிடங்களுக்கும் மேல் பொதுவெளியில்  இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நாம் மட்டுமின்றி,  அப்பகுதியில் செல்பவர்கள் என பலருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. 1000-க்கும் மேற்பட்ட வைரஸ்களை தாங்கிய எச்சில் துளிகள் காற்றில் 8  நிமிடங்கள் வரை நிலைத்து நிற்கும் திறன் கொண்டவை எனவும் ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.  

பொது இடத்தில் எச்சில் துப்பும் பழக்கம் கொண்டவர்கள் இத்தனை நாள் எப்படியோ, இனி மாறித்தான் ஆக வேண்டும். கொரோனா நோய் பரவலில் இருந்து நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டுமெனில் பொது இடத்தில் எச்சில் துப்புவதை அடியோடு தவிர்க்க வேண்டும். பெரும் கூட்டத்தில் பங்கேற்பது, அடிக்கடி முகத்தை, வாயை, கண்ணை, மூக்கை தொடுவது போன்றவற்றால் கொரோனா பரவும் என்பதைவிட, எச்சில் துப்புவது பெரும் ஆபத்தானது. கொரோனா நோய் பரவலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள,  முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது மட்டுமல்லாமல், எச்சில் துப்புவதை தவிர்ப்பது அதைவிட முக்கியமானது. எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள் தாங்களாக மாறாவிடில், அவர்களை அரசு மாற்றவேண்டும். வெறும் அட்டைக்கத்தி மட்டும் வீசக்கூடாது. இரும்புக்கரம் தேவை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்