SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா கனவு?

2020-05-26@ 02:06:09

இந்தியாவின் லிபுலேக், காலாபாணி, லிம்பியதுரா உள்ளிட்ட பகுதிகளை தனது நாட்டு எல்லையுடன் சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது; சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் ஆபத்தானது என நேபாள பிரதமர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லடாக்கில் பங்கோங் ஏரி அருகே மற்றும் வடக்கு சிக்கிமில் இந்திய - சீன படைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவங்களை பார்க்கும்போது இந்தியாவில் அமைதியற்ற நிலையை உருவாக்க சீனா முயற்சி மேற்கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிராக தூண்டியது பயனளிக்கவில்லை.

தற்போது இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தை சீனா தூண்டி விடுகிறது.அதற்கு மிக முக்கிய காரணம், கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன. சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் படிப்படியாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது. இது சீனாவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் அமைதியற்ற நிலையை உருவாக்க சீனா முயற்சி செய்யலாம்.

ஆகையால் தான் எல்லையில் திடீர் பதற்றத்தையும், அண்டை நாடுகளை இந்தியாவுக்கு எதிராக பேச வைப்பது உள்ளிட்ட விஷயங்களில் சீனா இறங்கியுள்ளது.  
 இவ்விஷயத்தில் நேபாளத்துக்கு எதிராகவும், எல்லை விஷயங்களில் ராஜதந்திர முறையிலும் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு முன் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்க வேண்டும். பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணித்த பிறகு, நேபாளத்திற்கு கண்டிப்பாக பாடம் கற்பிக்க வேண்டும். நேபாளத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம் சீனாவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

முக்கியமாக, கொரோனா விஷயத்தில் பல நாடுகள் சீனாவுக்கு எதிராக கிளம்பியுள்ளன. எனவே சாதுர்யமான முறையில் மத்திய அரசு செயல்பட வேண்டும். அப்போது தான் பொருளாதாரீதியாக சீனாவுக்கு ‘செக்’ வைக்க முடியும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் சீன பொருட்களுக்கு தடை விதிக்கும் முயற்சியில் இறங்கலாம். இந்த பொன்னான வாய்ப்பை இந்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தினால், அந்நிய முதலீடுகள் தமிழகத்திற்கு வரும். தினந்தோறும் அதிகரிக்கும் எண்ணிக்கையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்தால் தான், தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய முடியும். எனவே கொரோனாவை முழு கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.  இந்தியாவில் மிக விரைவில் கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டால், அந்நிய முதலீடுகள் குவிய துவங்கும். இதனால்  சீனா கடும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடும். கொரோனா கனவு நனவாகுமா?


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்