SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் சேல்ஸ்மேனாக போலீஸ் பட்டாளம் மாறிய கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-05-24@ 00:48:58

‘‘தூங்கா நகர போக்குவரத்து கழகத்துல என்ன கலாட்டா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரை மண்டல பகுதிகள்ல உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் ஊரடங்கால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே விடுமுறை விட்டுட்டாங்க. இதுல, ‘ரன்னிங் ஸ்டாஃப்’பான டிரைவர், கண்டக்டர், ‘டெக்னிக்கல் ஸ்டாஃப்’களும் அடங்குவாங்களாம்... டெக்னிக்கல் பணியாளர்களை கடந்த 20 நாட்களுக்கு முன்பே பணிக்கு வரச் சொல்லி அதிகாரிகள் உத்தரவாம். அவர்களும் வேலைக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறாங்க. நிற்கிற பஸ்ல கிடக்கிற டயர்ல இறங்கிக் கிடக்கும் காற்றை நிரப்பிச்  சரிப்படுத்துவது துவங்கி, பழுடைந்த பஸ் பாகங்களை சீரமைப்பது வரை, சுழற்சி முறையில் வாரத்திற்கு 4 நாட்கள் பணிக்கு வந்து, 8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை பார்த்து போறாங்க. அவசரத்திற்கு இவர்களுக்கென விடுமுறையும் இல்லையாம். அதையும் மீறி லீவு எடுத்தால் சம்பள பிடித்தம் செய்யப்படும்னு மிரட்டுறாங்களாம். ‘ரன்னிங் ஸ்டாஃப்கள் வீட்டுல நல்லா ஓய்வெடுக்கிறாங்க... நாங்க பணிக்கு வர்றோம்... எங்களுக்கு அவசர லீவும் கிடைக்க மாட்டேங்குது... வேலை பார்த்த அசதியில டீ கேட்டா கூட டெப்போல தர்ற மாட்டேங்கிறாங்க...’ என்று புலம்புகின்றனராம் டெக்னிக்கல் ஸ்டாஃப்கள் என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல பிரச்னையாமே...’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு தாமிரபரணி ஆறுதான் உயிர் நாடி. இப்போது பிரச்னை என்னவென்றால் பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தெளிந்த நீரோடை போன்று காட்சியளிக்கும். ஆனால் 3 மாவட்ட மக்களுக்கு பயன்படும் ஆற்று குடிநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக கலங்கலாகி இளஞ்சிப்பு நிறத்தில் வந்தது. இதுகுறித்து நெல்லை மாவட்ட நிர்வாகமோ, உள்ளாட்சி துறைகளோ வாய் திறக்கவில்லை. பொதுப்பணித்துறையை கேட்டால் மின்சார துறையைத்தான் கேட்க வேண்டும் என மாறி, மாறி குற்றம்சாட்டினர். 60 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எந்த தொழிற்சாலை கழிவுகளும் தாமிரபரணியில் கலக்கவில்லை. இதற்கு முன்பு நீர்மட்டம் 15 அடிக்கும் கீழாக குறைந்த போது கூட அணை தண்ணீர் கலங்கியது இல்லை. அப்படி இருக்கும் போது 40 அடி நீர்மட்டம் இருக்கும் நிலையில் தண்ணீரின் நிறம் மாறியது ஏன் என கேள்வி எழுந்தது. இது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளதாம்... அந்த தண்ணீரை குடிக்கலாமா, வேண்டாமா என்று மக்கள் யோசித்து கொண்டிருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தந்தை மகனையே பிரித்த அரசியல்... நண்பர்களை பிரிப்பது காலம் காலமாக நடப்பது தான். இப்போது அந்த பட்டியலில் குமரியும் சேர்ந்துவிட்டதாமே...’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குமரி மாவட்ட இலை கட்சியில் உள்ள முக்கிய புள்ளியும் சாலை களில் மரம் நட்ட அரசரின் பெயரை ெகாண்டவரும்... கிப்ட் கட்சியில் மகிழ்ச்சி பெயரை கொண்டவரும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் போல் நெருக்கமாக பழகி, பாச பிணைப்பில் சிக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர்கள்.என் உயிர் இவர் தான் என மாறி, மாறி இவர்கள் சமூக வலைதளங்களில் ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்தவாறு பதிவுகளையும் போட்டு கலக்கினார்கள். ஆனால் யார் கண் பட்டதோ, உறவில் விரிசலாகி மகிழ்ச்சியானவர் கிப்ட் கட்சியில் ஐக்கியமானார். அது முதல் இவர்களுக்கு இடையே அடிக்கடி பேஸ்புக்கில் மோதல், ஆபாச அர்ச்சனைகள் என நடந்து வருகிறது. எஸ்.பி.யிடமே இதுவரை 4, 5 முறை ஆளுங்கட்சி முக்கிய புள்ளி புகார் அளித்துள்ளார். கடைசியில் 2 நாட்களுக்கு முன் வந்த பதிவுக்கு தற்போது கிப்ட் புள்ளி மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. பதிலுக்கு கிப்ட் தரப்பினர் மாவட்ட காவல் உயரதிகாரியை சந்தித்து, மரம் நட்ட மன்னர் பெயரை கொண்டவர் மீது மீது புகார் கொடுத்துள்ளனர். பெட்டிஷன் வாங்கிய போலீசோ... நாங்க கொரோனாவை கவனிக்கவா, சட்டம் ஒழுங்கை கவனிக்கவா, பங்காளிகள் சண்டைகளை கவனிக்கவா என தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போலீஸ்காரங்களே டாஸ்மாக் மதுவை விற்றால் அவங்களை போலீடாஸ் என்ற ஜாயின்ட் பெயரில் அழைக்கலாமா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொரோனா ஊரடங்கையொட்டி, மாங்கனி மாவட்ட பட்டி போலீஸ் ஸ்டேசன் எல்லைப்பகுதியில் சரக்கு விற்பனை கொடி கட்டி பறந்துச்சாம். இலை கட்சி நிர்வாகியை சுற்றி வளைச்சி பிடித்த காவல்துறை, அவரிடம் இருந்து ₹7 லட்சம் மதிப்புள்ள சரக்கை பறிமுதல் செஞ்சாங்களாம். சந்துகடையில் சரக்கு விற்பனை செய்ததாக கைது செய்த போலீசார், அவரை ஜாமீனிலும் விடுவிச்சாங்களாம். ஆனா பறிமுதல் பண்ணின சரக்கில், கொஞ்சமா கணக்கை காட்டிய போலீஸ், ஆட்டோ டிரைவரை கொண்டு பல லட்சத்திற்கு சேல்ஸ் பண்ணிட்டாங்களாம். இது இப்போ பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பிடிச்ச சரக்கை அழிச்சிட்டோம், எங்ககிட்ட ஆதாரம் இருக்குன்னு, வீடியோ காட்டுறாங்களாம் திறமையான போலீஸ். என்னதான் ரசீது வச்சிருந்தாலும், சரக்கை குடித்த மதுபிரியர்கள் மறந்திடுவாங்களா என்ன? போலீசாரே சரக்கை விற்பனை செய்த விவகாரம் தான் ஹாட் டாப்பிக்கா இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்