SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்து ரூ.36,352க்கு விற்பனை

2020-05-23@ 12:47:05

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்ட பின்னர் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று (மே 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,544 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,528 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 36,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 128 ரூபாய் உயர்ந்து 36,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.51.40 ஆக இருந்தது. ஆனால் இன்று அதன் விலை ரூ.52.10 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 52,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்