SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என்று ஓபிஎஸ் மீது புகார் அளித்ததால் தன் மீது கைது நடவடிக்கை : ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

2020-05-23@ 10:28:53

சென்னை : திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அதிகாலையில் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ். பாரதியின் வீட்டுக்கு அதிகாலையில் சென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன.சென்னையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையானது. இதையடுத்து தனது கருத்துக்காக மறுநாளே அவர் வருத்தம் தெரிவித்த நிலையில், 100 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் அழைத்துச் செல்லும் போது நிருபர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, 'பிப்ரவரி 15ம் தேதி நான் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது. அதற்காக இப்போது வந்து கைது செய்வது உள்நோக்கமுடையது. நான் சமீபத்தில் கொரோனா தடுப்புக்கான உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு இருந்ததை சுட்டிக் காட்டி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தேன். இதற்காகத்தான் நான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என்னை கைது செய்துள்ளார்கள். சீப்பை ஒழித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்த முடியாது. கொரோனா ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கப்படும். நான் வீட்டில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டிருந்தேன் . இந்த சூழ்நிலையில் என்னைக் கைது செய்துள்ளனர்.' என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்