SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலம் பதில் சொல்லும்

2020-05-22@ 17:16:36

நான்கு நாள் அவகாசம் கொடுத்து அறிவிக்க வேண்டிய ஊரடங்கை 4 மணி நேர அவகாசத்தில் அறிவித்துவிட்டு, அப்புறம் அவர்கள் போகிறார்களே, தண்டவாளத்தில் விடாதே, சாலையில் விடாதே, பஸ்சில் விடாதே என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள் புலம்ெபயர்ந்த தொழிலாளர்கள். எங்கேயோ ஊர் பெயர் தெரியாத இடத்தில் சாவதை விட சொந்த மண்ணில், பட்டினியால் கூட உயிர் போகட்டும் என்ற நிலைமையில்தான் தொழிலாளர்கள் மழை, வெயில், புயல், காற்று என்று எதையும் பார்க்காமல் நடக்கின்றனர். ஆனால், மத்திய அரசு இன்னமும் கூட வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுக்க சாகிறார்கள், ெகாரோனா பரவிக் கொண்டுதான் இருக்கிறது. வல்லரசு நாட்டு தலைவரான அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்கிறார், உபகரணங்கள் தயாரிக்கும் ஆலைக்கு சென்று பார்வையிடுகிறார். இங்கிலாந்து பிரதமர் செத்து பிழைத்தும்கூட என் மக்களை காப்பாற்ற எதையாவது செய்தே ஆவேன் என்று ஒரே வாரத்தில் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்துவிட்டார். சீன அதிபர் மிக தைரியமாக மருத்துவமனைக்கே சென்று நோயாளிகளுக்கான ஏற்பாடுகளை பார்வையிடுகிறார்.

மாசத்துக்கு நாலு முறை வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த பிரதமர் இப்போது டெல்லியில் தன்னுடைய வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. அவராக விரும்பினால் வீடியோ கான்பரன்சில்தான் அதிகபட்ச மீட்டிங்கே. மருத்துவமனை ஏற்பாடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாடு ஆகியவை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. உலக நாடுகளின் முன்னேற்றத்தை நேரில் பார்த்தால்தான் அதை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும் என்ற பொன்மொழிகளை பிரதமரின் பின்னால் இருந்து உதிர்த்தவர்கள், இப்போது அவரை அங்கே போகக்கூட சொல்ல வேண்டாம்.

அந்நாட்டின் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதற்கேற்பவாவது இந்தியாவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்வதற்காக ஒரு கட்சி 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது. ஆனால், அதன் நம்பர் என்ன, ஆர்சி புக் இருக்கிறதா, டயரில் காற்று இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளை கேட்டு நோகடிப்பவர்கள், காலத்தின் தீர்ப்புக்கு ஒரு நாள் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்