SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரசிகர்களுக்கு பதில் செக்ஸ் பொம்மைகள்!: கால்பந்து அணிக்கு அபராதம்

2020-05-22@ 01:43:31

தென் கொரியாவில்  பிரபலமான  கே லீக் கால்பந்து தொடர் பூட்டிய அரங்கில்  ரசிகர்கள் இல்லாமல்  மே 8ம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.  
ஒரு போட்டியின்போது  எப்சி சியோல் அணி சார்பில் கேலரியில்  26 பெண் பொம்மைகளையும், 2 ஆண் பொம்மைகளையும் வைத்தனர். இதை  பார்த்து வீரர்கள் உற்சாகமானார்களோ இல்லையோ அரங்கில் இருந்த போட்டி அமைப்பாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். நேரடி ஒளிபரப்பை பார்த்த ரசிகர்களுக்கோ அதிர்ச்சி.

காரணம், செக்ஸ் பொம்மைகளுக்கு எப்சி சியோல் அணியின் சீருடை வண்ணத்தில் உடைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன. இந்த சர்ச்சையால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விதிமுறைகளை மீறியதற்காக   அந்த கிளப்புக்கு 61.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருத்தம் தெரிவித்துள்ள கிளப் நிர்வாகிகள், அந்த பொம்மைகள்  பாலியல் பயன்பாட்டிற்கானவை கிடையாது என மறுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்