SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா; இன்று ஒரே நாளில் பாதிப்பில் இருந்து 987 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை

2020-05-20@ 18:53:38

சென்னை: தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,191- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139-லிருந்து 1,06,750-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,163-லிருந்து 3,303-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174-லிருந்து 42,298-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,882 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 987 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 63 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இன்று மொத்தம் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
      
* தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 60.49% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 44.60% ஆக உள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 3,60,068 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,894 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 743 பேருக்கு தொற்று உறுதியானது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8,496 ஆண்கள், 4,692 பெண்கள், 3 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.65% ஆக உள்ளது

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* கொரோனா முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 8,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 83


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்