SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜபாளையம் அருகே 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்

2020-04-10@ 19:13:40

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் கடந்த தை மாதம் முடிவு செய்யப்பட்ட திருமணம், கொரோனா ஊரடங்கு காரணமாக 10 பேர் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் வைரமுத்து. விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதாவுக்கும் கடந்த தை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.பங்குனி மாதம் 27ம் தேதி (ஏப்.10) ஊரின் மையப் பகுதியில் பந்தல் அமைத்து ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து திருமணம் நடத்த உள்ளதாக ஊர் பெரியோர்கமுன்னிலையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனவே, நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நேற்று மிக எளிமையாக மணமகன் வீட்டின் முன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகன் பெற்றோர், மணமகள் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். சமூக விலகல் முறையில் இடைவெளி விட்டு நின்றதோடு, மணமக்கள் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.வீட்டின் முன் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, ஊர் தலைவர் லட்சுமணன் மாங்கல்யம் எடுத்துக் கொடுக்க மணமகன் வைரமுத்து, மணமகள் கவிதா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் ஊர் தலைவர் மற்றும் பெற்றோர்கள் மண மக்களை வாழ்த்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்