SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதுக்கல் விற்பனையால் கிராக்கி ஒரு பாக்கெட் சாராயம் 150 ‘குடி’மகன்கள் புலம்பல்

2020-04-10@ 19:11:53

புதுச்சேரி: புதுவையில் சாராய பாக்கெட்டுகள் பதுக்கி விற்கப்படுவதால் அவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு பாக்கெட் சாராயம் ரூ.150 வரை
விற்கப்படுகிறது. தேசிய ஊரடங்கு காரணமாக புதுவையில் மதுபானங்கள், சாராயக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் குடோன்களுக்கும் கலால்துறை சீல் வைத்ததோடு அவ்வப்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர கள்ளச்சாராய விற்பனை, மதுபானங்கள் பதுக்கலையும் கண்காணித்து வருகின்றன.
 இதன் காரணமாக புதுச்சேரியில் குடிமகன்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஊரடங்கு முதல்வாரத்தில் வீடுகள், தோப்புகள், புதர்களில் ஆங்காங்கே பதுக்கி விற்கப்பட்ட மதுபானங்கள் தற்போது ஸ்டாக் இல்லாததால் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் ரூ.50, ரூ.100க்கு விற்கப்பட்ட ஒரு பாக்கெட் சாராயம் தற்போது புதுச்சேரிக்குள் ரூ.150க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன. கூடுதல் விலை கொடுத்து ‘குடி’மகன்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். அதுவும் தரமில்லாதவையாக இருப்பதால் அவர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.

இதேபோல் தரமில்லாதவை என மதுபிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட மதுபான பிராண்டுகள்கூட தற்போது குவார்ட்டர் பாட்டில் ரூ.350 வரை விலை போகின்றன. அதற்கும் கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி பகுதியில் இருந்து தமிழகத்துக்கு காய்கறி உள்ளிட்ட வாகனங்கள் வழியாக சாராயம் மற்றும் மதுபானங்கள் ரகசியமாக கடத்தப்படுவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளன. அதன்பேரில் மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளன. மேலும் அங்கு இரவு நேரங்களில் அதிரடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஐஜி, சீனியர் எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் கடத்தப்படும் சாராய பாக்கெட்டுகள் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு பாக்கெட் ரூ.200 வரை விற்கப்படுகிறது. அங்கு ‘குடி’மகன்கள் கூட்டம் அலைமோதுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்