SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பரவலில் தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது..: தலைமை செயலாளர் சண்முகம் தகவல்

2020-04-10@ 19:10:16

சென்னை: தமிழ்நாட்டில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 5 பேர் மூலம் 72 பேருக்கு பரவியுள்ளது. கொரோனா பாதித்துள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதைக்கு உட்படுத்தியுள்ளோம். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனைக்கு வந்த 71 பேருக்கும் தொற்று ஏதும் இல்லை என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து  911-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனை அடுத்து கொரோனாவால் 9 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சுவாச பிரச்சனை உள்ளவர்களை பரிசோதித்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என தலைமை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் தினமும் ஆய்வுகள் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். நாளை பிரதமருடன் ஆலோசித்த பிறகு ஊரடங்கு பற்றி தமிழக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வரும் பரிசீலனை செய்து வருகிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.  

 * 90 சதவீத அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

* ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளது.

* கொரோனா பாதிப்பில் இரண்டாம் கட்டத்தில் தான் தமிழகம் உள்ளது.

* ரேபிட் கிட் வருவதில் கால தாமதம் ஏற்பட்டாலும் தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

* பரிசோதனையில் கவனக்குறைவாக செயல்பட்டதால் மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு.

* கொரோனா தடுப்புப் பணிக்கு மத்திய அரசு ரூ.314 கோடி வழங்கி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்